மல்வத்து ஓயாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.