உங்கள் தொழிலில் சலிப்புத் தட்டுதா ?
தற்போது இருக்கும் பொருளாதார பிரச்சினைகளில் அனைவருக்கும் கைவசம் தொழில் இருப்பது அவசியம்.
அதன்படி அலுவலகத்துக்கு தினமும் சென்று வேலை செய்வது சில நேரங்களில் எரிச்சலையும் சோர்வையும் உண்டாக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் இருக்கும் உற்சாகமற்ற மனநிலையினால், தொழில் செய்யும் இடத்தில் தூக்கம், சோர்வு போன்றவை ஏற்படுவதுண்டு.
உங்கள் வேலையை நீங்கள் அலட்சியமாக எண்ணலாம், கற்றல் திறன் குறைந்துகொண்டே போகலாம், வேலையில் நேரத்தை வீணடிப்பது போல இருக்கலாம், கவனச்சிதறல் உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் சலிப்புத்தட்டலாம்.
இதனால் தொழிலை ஒழுங்காக செய்ய முடியாமல் போகலாம். அப்படி வேலை செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் அதனை சமாளிக்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
இலக்குகள் நிர்ணயம் – உங்கள் இலக்குகளின் கால நிர்ணயத்துக்கு ஏற்ப, அதை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக பார்க்க ஆரம்பித்தாலே தொழிலில் சலிப்புத் தட்டாது.
திறன்களை கற்றல் – உங்களிடம் இருக்கும் திறன்களுக்கு மேலதிகமாக ஏதேனும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், உங்களது உயரதிகாரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி – உங்களுக்கான வளர்ச்சிகள் என்னவென்பதை சிந்தியுங்கள்.
ஆசை – உங்கள் ஆசை மற்றும் கனவை ஈடேற்ற என்ன செய்ய வேண்டும் என சிந்தித்துப் பாருங்கள். அப்போது உங்கள் தொழிலில் சலிப்புத் தட்டாது.
இடைவேளை – நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் செய்யும்போது இடையிடையே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
மேற்கூறப்பட்ட காரணங்களைப் பின்பற்றினாலே இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.