காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெறவில்லை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.
“நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது,” என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.