முகம் அதிகமாக வியர்க்கிறதா ?
அதிக வெப்பம் நிலவும்போது வியர்ப்பது இயல்புதான். குறிப்பாக முகத்தில் அதிகமாக வியர்க்கிறது என்றால், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் எனும் சுரப்பி தானாகவே சுரக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.
இந்த சுரப்பி முகம் மற்றும் தலையைத்தான் அதிகமாக பாதிக்கிறது.
மரபணு மூலம், நீரிழிவு, அதிக உடல் எடை போன்ற காரணங்களாலும் முகத்தில் அதிகமாக வியர்க்கிறது.
இந்த வியர்வையை தடுப்பதற்கு மிகவும் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை நிறுத்த வேண்டும்.
மேலும் உணவு முறைகளிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள் உண்ண வேண்டும்.
முகத்தில் எண்ணெய்த் தன்மை அதிகம் இருந்தாலும் அதிகமாக வியர்க்கும்.