ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்ற சதி
வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் பாரிய வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
நாட்டை பங்களாதேஷ் நிலைமைக்கு தள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிவப்புத் தம்பிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதியாக வைத்திருக்க சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.