இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் ஆயுதங்களைவிற்க ஒப்புதல் !

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் ஆயுதங்களைவிற்க ஒப்புதல் !

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை தடை செய்வதற்கு உரிமை குழுக்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 18.82 பில்லியன் டொலர்களுக்கு இஸ்ரேலுக்கு 50 எப்-15 போர் விமானங்களை விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )