சகல தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஆராய்ந்து முடிவை அறிவிப்போம்
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படாத பின்னணியில், சகல ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்
ஞாபனங்களையும் மீண்டும் நன்கு ஆராய்ந்து, யாருக்கு ஆதரவளிப்பதென்பது குறித்து எதிர்வரும் 14 ஆம் அல்லது 15 ஆம் திகதிகளில் தமிழரசுக்கட்சி அறிக்கையொன்றை வெளியிடுமென இலங்கைத்தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான விசேட குழு, ஏனைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் மீண்டும் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதித்தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், இத்தீர்மானம் குறித்து கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான விசேட குழு, ஏனைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் மீண்டும் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், இத்தீர்மானம் குறித்து கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில், இலங்கைத்தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த முதலாம் திகதி கட்சியின் மத்திய குழு கூடிய வேளையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் சிலரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை எனவும், தற்போது அவை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்
அவற்றையும் நன்கு ஆராய்ந்ததன் பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்