ஹிருணிகாவுக்கு நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

ஹிருணிகாவுக்கு நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றஞ்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட் டுக்கமை ய,
அவரை நாளை (13) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் தாக்கல் செய்யப்பட்ட
குறித்த முறைப்பாட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (11) விசா
ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.

அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 04ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அத்துடன், பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர,வழக்கு விசாரணை தினத்தன்று
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )