அனுரவுக்கு வாக்களித்து நாட்டை கொளுத்துகின்ற கலாசாரத்தை ஆதரிக்க வேண்டாம் !

அனுரவுக்கு வாக்களித்து நாட்டை கொளுத்துகின்ற கலாசாரத்தை ஆதரிக்க வேண்டாம் !

அனுரவுக்கு வாக்களித்து நாட்டைக்கொளுத்துகின்ற கலாசாரத்தை ஆதரிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 40 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச தலைமையில் வெலிமடையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

“விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாப்படைகின்ற வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டி வசதிகள் ஆரம்பிக்கப்படுவதோடு பால் உற்பத்தியாளர்களையும் மிளகு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பச்சை வீட்டு நிர்மாணத்திற்காக சலுகை அடிப்படையில் கடன் வழங்குவோம்.

அரசாங்கத்தின் சிறந்த கையாளாக ஜே.வி.பியின் அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களுக்காக சஜித் பிரேமதாச ஒருபோதும் கூலிக்கு கோஷம் போட்டதில்லை.

பதாகைகளை ஒட்டவில்லை. தலதா மாளிகையில் ராஜபக்ஷகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால் அநுர குமார திசாநாயக்க அதனை செய்திருக்கின்றார்.

அவர்கள் விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சுகள் உள்ளிட்ட இராஜாங்க, பிரதி அமைச்சு பதவிகளையும் பெற்று இருக்கிறார்கள்.

நாட்டை கட்டியெழுப்பக் கூடிய சிறந்த குழு எம்மோடு இருக்கின்றது.

ஜனாதிபதிகள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நான் ஜனாதிபதியானவுடன் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெறாத ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

ஊதியம் பெறாத தன்னார்வசேவையாக எனது சேவையை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )