இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவு யாருக்கு ?
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவு தொடர்
பில் பொருத்தமான அறிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம் என்று
அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிறப்பு குழுவின் உரையாடல் நேற்று (10) வவுனியாவில் நடந்தது. இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர்மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர், “நாம் இறுதி முடிவை எப்போது எடுப்போம் என்பதே முக்கியமானது. கட்சி எடுத்த தீர்மானத்தில் என்னதிருத்தங்கள் – மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளோம். பொருத்தமான அறிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம்.
இந்தத் தேர்தலில் எங்களின் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் ? என்ன
அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்? என்பன தொடர்பிலும் அதற்காக எங்களுடைய கட்சி ரீதியான கொள்கை, இனப்பிரச்னை தீர்வு, சமஷ்டி, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்மானங்கள், இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகளை கருத்தில் கொள்வோம்.
எங்களுக்கும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள
விடயங்களில் இணக்கம் ஏற்படக் கூடியவற்றை அடையாளப்படுத்தி ஓர் அறிக்கையை எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.