‘கிரியல்லவின் மகள் ஜம்பு பழம் போல உள்ளார் ‘ : தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் லால்காந்தவின் கருத்துக்கு கண்டனம் !
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாள சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கிரியல்லவின் மகள் ஜம்பு பழம் போல உள்ளதாகவும் அவரை மீண்டும் பார்க்க தோன்றுவதாகவும் அவரின் போஸ்டரை தான் வாகனத்தை நிறுத்தி பார்த்ததாக’ கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் இந்த கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது.
பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் சமிந்திராணியால் ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பில் லால்காந்த இவ்வாறு கருத்தை வெளியிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெண்ணிய அரசியல் மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து பேசி இதுபோன்ற அறிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அங்கீகரிக்குமா என்று தான் கேட்கிறேன் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.