ஸ்பெயின் வெள்ளம் : 200 இற்கும் மேற்பட்டோர் பலி : மீட்புப் பணிகள் தீவிரம் !
ஸ்பெயினில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது.
ஸ்பெயினின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது.
ஸ்பெயினின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை விடவும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை ஸ்பெயினில் கனமழை பொய்த்தது.
இதில் கிழக்கு வலேன்சியா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேறும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றின் மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம்.
இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை
தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பலர் மாயமாகி உள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணியில் ஸ்பெயின் இராணுவம் தற்போது ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.