வேகமாகப் பரவும் சின்னம்மை : சுகாதார அமைச்சின் அறிவிப்பு !
நாட்டில் வேகமாகப் பரவிவரும் சின்னம்மையை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை அம்மை தடுப்பூசி வழங்கும்
விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை பெறாத, ஒரு தடுப்
பூசி மாத்திரம் பெற்ற தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான உரிய சான்றுகளற்ற அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் 206 மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்தத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
9 மாதங்களுக்கு மேற்பட்ட, 19 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கும் சின்னம்மை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.