கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன நேற்று (16) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில்
இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இர்ஷாத்,  பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிதாக சேவையில் இணைந்து கொண்ட வைத்தியர்கள் மத்திய முகாம், இறக்காமம், நிந்தவூர், மாவடிப்பள்ளி ஆகிய வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )