அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 8 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் கணக்கெடுப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், 18 இலட்சம் பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இருப்பினும், தற்போது 17,20,000 பயனாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.