கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு
அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வீதியை மூடுவதற்கு நேற்று (21) நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோன்று ஆபத்தான நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதால், இரவில் பயணிக்கும் வாகனங்களுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதியை இரவில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka