நான் சிறப்பாக ஆடவில்லை அதனால் அணியில் இடம் கிடைக்கவில்லை
நான் சிறப்பாக ஆடவில்லை, அதனால் அணியில் இடம் கிடைக்கவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐ. சி. சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்திய ரி – 20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக் கான அணியில் இடம்கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “அணியில் இடம் கிடைக்காதது ஏன்? என்னை காயப்படுத்த வேண்டும். ஒரு நாள் போட்டியில் நான் நன்றாக ஆடியிருந் தால் சம்பியன்ஸ் கிண்ண அணியில் இடம் கிடைத்திருக்கும். நான் சிறப்பாக ஆடவில்லை என்றால், அதை ஏற்றுகொள்ளதான் வேண்டும் அதே சமயம் சாம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கான இந்திய அணியை பார்த்தால் நன்றாக இருக்கிறது.
அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் இந்திய அணிக்காகவும், முதல்தர கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.