பணி நேரத்தில் தூங்கிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

பணி நேரத்தில் தூங்கிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

பொலிஸார் சிலர், தங்களுடைய பணி நேர கடமையின் போது, தூங்கிக் கொண்டிருப்பதை போல, சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இது தொடர்பில் கடும் அவதானத்தை செலுத்தியுள்ள பொலிஸ் மா அதிபர், அவை தொடர்பில், அந்த பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ​தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )