9983 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

9983 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் எண்ணாயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, நேற்று (29) காலை 6 மணி முதல் இன்று(30) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 9983 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 49 பேர்

அதிக வேகத்துடன் வாகனம் செலுத்திய 110 பேர்

வீதி சட்டங்களை மீறிய 1086 பேர்

வாகன அனுமதி பத்திரங்கள் இல்லாதோர் 649 பேர்

வேறு சில போக்குவரத்து சட்டமீறல்களில் ஈடுப்பட்டோர் 7676

மொத்தமாக 9570 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )