லொறி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 71 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் லொறி கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் எழுபத்தியொரு பேர் உயிரிழந்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் Bhuna மாவட்டத்தில் இந்த விபத்து பதிவாகியுள்ளதுடன் இதில் காயமடைந்தவர்கள் Bhuna பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
குறித்த விபத்தில் 68 ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
CATEGORIES World News