பூமியை நெருங்கும் சிறுகோள்

பூமியை நெருங்கும் சிறுகோள்

ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன.

அதன்படி 2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இது சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25ஆம் திகதியான நாளை இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் இது பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது.

இருப்பினும் இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )