நல்லை ஆதீனத்திற்கு நாமல் விஜயம்

நல்லை ஆதீனத்திற்கு நாமல் விஜயம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) வருகை தந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார்.

இதன்போது, நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார்.

மேலும், அவர்கள் இருவருக்குமிடையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக  நந்திக் கொடி வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )