ரணிலை சாடுகிறார் மனோ கணேசன்
SJB தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறமாட்டார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கூற்றை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விக்ரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களைக் கையாளும் திறன் கொண்ட ஒரேயொரு பொருளாதார நிபுணராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டிய கணேசன், குடிமக்களை தவறாக வழிநடத்தும் அவநம்பிக்கையான முயற்சியே இந்தக் கருத்துக்கள் என அவர் சாடினார்.
ஹொரணை பொது விளையாட்டரங்கில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற “ரணில் இயலும் வெற்றிப் பேரணியின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை ரணில் வலியுறுத்தினார்.
சஜித் மற்றும் அனுரவின் கூற்றுக்கு ஏற்ப இந்த உடன்படிக்கைகளை மாற்றியமைப்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி அப்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.