வாக்களிக்க அனைவரும் செல்வதால் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் !

வாக்களிக்க அனைவரும் செல்வதால் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் !

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கு
சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு இடையூறு
ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, சுகாதார ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் வாக்குச் சாவடியாவது அல்லது அவர்கள் கடமையாற்றும் இடத்துக்கு மாற்றிடம் வழங்க வேண்டுமென இச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள
சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை
வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய சுகாதாரப் பணியாளர் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச்
சென்று வாக்களிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து சுகாதார ஊழியர்களும் வாக்களிக்க தத்தமது தொகுதிகளுக்குச் சென்றால், வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிக்கப்படலாமென சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )