“நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக எவரும் கூறவில்லை”

“நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக எவரும் கூறவில்லை”

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சட்ட மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், “பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிரும்புவதாகவும், எதிர்வரும் காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )