“தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்”

“தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்”

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் “சீனாவிடம் இருந்து தைவானை ஒருபோதும் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்” என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கூறுகையில், “தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )