துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து 3 மாதங்களில் 84 சந்தேக நபர்கள் கைது!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து 3 மாதங்களில் 84 சந்தேக நபர்கள் கைது!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய84 சந்தேக நபர்களை பொலிஸார் கடந்த 03 மாதங்களுக்குள் கைது செய்துள்ளனர்.

அதேநேரம், துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று ரி-56 ஆயுதங்கள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள், குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்
கள் என்பனவும் கடந்த 03மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்
கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் சந்தேக நபர் சம்பவம் இடம் பெற்ற 10-15 நிமிடங்களுக்குள் பொலிஸ் நடமாடும் ரோந்துப்பிரிவுகள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகள் காரணமாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் நீதிமன்றத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் சம்பவம் இடம்பெற்ற 04 முதல் ஐந்து நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக
அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )