சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21-ம் தி தொடங்க இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் முதனைமையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே இருக்கும். ஏனென்றால் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகள் புதிய ஜெர்சியுடன் களமிறங்கும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கடந்த சீசனில் சென்னை அணியின் ஸ்பான்சாராக யூரோகிரிப் டயர்ஸ் நிறுவனமும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனமும் இருந்தது. ஆனால், இந்த முறை முழு நேர ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
கடந்த வருடம் ஜெர்சியின் பின்பக்கத்தில் இருந்த எதியாட் ஏர்வேஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தை இந்த முறை முன்பக்கத்தில் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த யூரோகிரிப் டயர்ஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணிக்காக தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். வெற்றியுடன் விடைபெறும் என்று தோனி விரும்பும் சூழலில், இந்த சீசனில் தோனியைப் பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.
Closer to our hearts now, than ever before! ✈💛 We are super excited to take our partnership with @etihad to greater heights!#Etihad #CSK #WhistlePodu pic.twitter.com/QazwcEYcqY
— Chennai Super Kings (@ChennaiIPL) January 30, 2025