இரு அணிகளையும் இணைக்காமல் ஓய மாட்டேன்

இரு அணிகளையும் இணைக்காமல் ஓய மாட்டேன்

“நான் பொதுவாக பதவிகளைவிட சவால்களை எதிர் கொள் ளவே விரும்புவேன். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக் கிய மக்கள் சக்தி கட்சியை இணைக்கும் பேச்சுவார்த்தைகளின் வெற்றி முடிவு எவ்வாறாக இருந்தாலும் என்னால் முடிந்த சகல முயற்சியையும் முன்னெடுப்பேன்” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கண்டிக்குச் சென்று நேற்று (30) மகாசங்கத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘‘தலைமைத்துவத்துடன் கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இன்னுமொரு பகுதியினருடனேயே தற்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐக்கிய மக்கள் சக்தி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை கொண்ட கட்சியாகும்.

இருந்த போதும் இரு கட்சிகளுக்கும் இன்று இரு தலைவர்கள் இருக்கிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. ஒரே நேரத்தில் பிரச்சினை களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. இது ஆரம்பக்கட்டம் மாத்திரமே. எதிர்காலத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலோ அல்லது வேறு விடயங்கள் தொடர்பிலோ சிக்கல் நிலை ஏற்பட்டால் அதுதொடர்பில் அப்போது கலந்துரையாடுவோம்.

இருத் தரப்பும் ஒன்றாக செயற்படுவதென்றால் கட்சியின் தலைமைத்துவத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பில் நாங்கள் இன்னும் கலந்துரையாடவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நல்லவொரு கோணத்தில் சிந்தித்து செயற்படுகிறார். இந்த பேச்சுவார்த்தைகளுக்கான செயற்பாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க எங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கி பக்கபலமாகவும் இருக்கிறார்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். நான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கிறேன் என்ற கருதுகிறார்கள் என்றால் அது தவறான நிலைப்பாடாகும்.

அதுபோன்று தனிநபரென்ற அடிப்படையில் கட்சிகளின் தீர்மானங்களை என்னால் எடுக்கவும் முடியாது. கட்சி என்பது குழுவாகும். கட்சிகளின் தலைமைத்துவத்தில் எந்த சிக்கலும் இல்லை.

முதலில் கட்சிகளின் நோக்கங்களில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதன் பின்னர் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்த இணைவில் பிரதான இரு கட்சிகளே உள்ளடங்குகின்றன. அவ்வாறெனில், ஒருசில காரணங்களில் முதலில் பொது இணக்கப்பாட்டுக்கு வருவோம். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும். உள்ளூராட்சித் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவில்லை.

அதுதொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவும் இல்லை. தற்போது கொள்கை ரீதியான யோசனைகளில் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். அவ்வாறு சகல விடயங்கள் தொடர்பிலும் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் இலட்சினையை தீர்மானிக்கலாம்.

கட்சியின் தலைமைத்துவங்களை குறைகூறவும் முடியாது. இருவரும் தலைவர்களே. நான் பொதுவாக பதவிகளைவிட சவால்களையே எதிர்கொள்வேன். வெற்றி முடிவு எவ்வாறாக இருந்தாலும் என்னால் முடிந்த சகல முயற்சியையும் செய்வேன்’’ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )