தெற்கு கடற்படை பகுதியின் புதிய தளபதி நியமனம்
தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, இன்று (03) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு தெற்கு கடற்படைப் கட்டளையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு, தெற்கு கடற்படைப் பகுதியின் பதில் தளபதியாக கடமைகளை மேற்பார்வையிட்ட கொமடோர் நதித் வால்போல, நியமனத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவிடம் முறையாக ஒப்படைத்தார்.
CATEGORIES Sri Lanka