தேர்தலுக்கு பின்னர் மக்களின் இயல்புவாழ்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது – ஜனாதிபதி

தேர்தலுக்கு பின்னர் மக்களின் இயல்புவாழ்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது – ஜனாதிபதி

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புத் தரப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை நேற்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )