பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கேட்டு பொலஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெனிபிட்டியாய, எலுவாவல, மஹாதெனியவில் வசிக்கும் பொல்வத்த கொல்லையைச் சேர்ந்த 29 வயதுடைய நவோத் ஜும்மான் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவர் சுமார் 05 அடி 05 அங்குல உயரம், ஒல்லியான உடல், குட்டையான முடி மற்றும் தாடியுடன் இருப்பதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண்:-
- தலைமையகம் பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு :-
071-8591691 - நிலைய கட்டளைத் தளபதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் நிலையம் களுத்துறை தெற்கு :- 071 – 8594360