
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் – கடற்படைத் தளபதி இடையே சந்திப்பு
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (03) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கான 26வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்கு, தென் கொரிய தூதுவர் மியோன் லீ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka