ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் ஷங்கர் ராஜா !

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் ஷங்கர் ராஜா !

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா.

கடந்த ஆண்டு இவர் இசையில் வெளியான தி கோட் திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.

இசையமைப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்பொழுது ரியோராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

கடைசியாக விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியான நேசிப்பாயா படத்தில் இசையமைத்தார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் #Randomyuvanpaatu என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதில் நெட்டிசன்கள் அவர்களுக்கு பிடித்த யுவன் பாடல்களின் வீடியோவை பதிவிட்டு இந்த ஹாஷ்டாகை உபயோகித்து வருகின்றனர்.

இதற்கு நன்றி தெரிவித்து யுவன் ஷங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ” யார் இந்த டிரெண்டை ஆரம்பித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நீங்கள் காட்டும் அன்பில் நான் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி.”

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)