
அமில சந்திரானந்தவிற்கு விளக்கமறியல் !
பல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் அமில சந்திரானந்த என்பரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட வேளையில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவில் வைத்து அந்த நாட்டின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் அமில சந்திரானந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.