
சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்பு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் தான் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதை அறிவித்துள்ளார்.
CATEGORIES Cinema