
பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பக்டீரியா தொற்றே காரணம்
கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பாக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இறந்த விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்ற பாக்டீரியா தொற்று காரணமாகவே விலங்கினங்கள் இறந்துள்ளதாக தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி முகமது இஜாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ”அண்மைய நாட்களில் வாத்துகள் இறப்பது தொடர்பாக கொழும்பு மாநகர சபை தலையிட்டு ஹோமாகம விலங்குகள் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து இறந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல பரிசோதனைகளை மேற்கொண்டது.
மேலும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எஞ்சிய விலங்குகளுக்கு இன்று முதல் நுண்ணுயிர் எதிர்க்கக்கூடிய தடுப்பூசி போடப்படும்.” என தெரிவித்துள்ளார்.