
ஓய்வினை அறிவித்தார் திமுத் கருணாரத்ன
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி அஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
குறித்த போட்டி திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் உள்ளடங்களாக 7,172 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
CATEGORIES Sports News