
மலையகத்தில் காணி வீட்டு திட்டம் சரிவராது
“ மலையகத்தில் காணி வீட்டுத் திட்டம் சரிவராது. 10 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீடுதான் அவசியம். அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
எதிரணியில் இருக்கும்போது மலையக மக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய விடயங்களை, அதிகாரத்தில் இருக்கும்போது ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
TAGS Member of the ParliamentSri lankaVelusami Radhakrishnanமலையக மக்கள் முன்னணியின் தலைவர்மலையகம்வீ. இராதாகிருஷ்ணன்