யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று(27) தெரிவித்துள்ளார்.

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ”கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுகின்றது, யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுள்ளது அதை சிலர் நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்.

இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது, எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை. மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )