மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களாக இருந்தவர் மாவை சேனாதிராஜா

மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களாக இருந்தவர் மாவை சேனாதிராஜா

 வடக்கு, கிழக்கு மக்களுக்காக மாத்திரம் அல்லாமல் மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாததாகும். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தொழிலாளர் தேசிய சந்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் துன்பங்கள் துயரங்களை அனுபவித்து வந்த நேரத்தில் அவரின் கண்டன அறிக்கைகளும், பாராளுமன்றதில் எழுப்பிய குரல்களும் அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களாக இருந்து வந்துள்ளன. மலையக மக்களும் தமது சொந்தம் என்று அவர்களின் உரிமைகளுக்கும் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். எமது மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் கட்சி உறுப்பினர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )