மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்கும்

மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்கும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகமவில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தானும் தனது அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை செல்லவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் அரச இல்லங்களிலிருந்து வெளியேற ஏன் சிரமப்படுகின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், ”வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து ஒரு மாளிகையில் வாழ்வது நியாயமற்றது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் மாறும் பட்சத்தில் அவர்களால் ஏன் மாற முடியாது? அவர்களுக்கு போக வேறு வசிப்பிடம் இல்லை என்றால், அவர்களுக்கு வாழ பொருத்தமான வீட்டை நாங்கள் வழங்குவோம், அவர்கள் வசிக்கும் மாளிகை மிகப் பெரியது.

நாங்கள் அவர்களை வெளியேறச் சொன்னால், அவர்கள் அதை அரசியல் துன்புறுத்தல் என்று சொல்கிறார்கள். நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. நாட்டை புதிய திசையில் கொண்டு செல்கிறோம். அவர்களை வெளியேறச் சொல்வதற்கு முன், அவர்கள் வெளியேற வேண்டும். அவர்களிடம் நாம் கேட்பது மாற்றத்தை தான். வரி செலுத்துவோரின் பணத்தை செலவழிப்பதற்கு முன், நாம் இரண்டு முறை யோசிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )