தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதிக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), நேற்று ( 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
தொடர்ந்து, பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பில் அதன் பங்கை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தி, மேஜர் ஜெனரல் முனசிங்கவுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
CATEGORIES Sri Lanka