அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்

அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்

மன்னாரை கிலிகொள்ள வைத்துள்ள பழிவாங்கல் படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு தரப்பின் அசமந்தபோக்கால்தான் படலம் தொடர்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ”வடக்கு, கிழக்கில் முப்படைகள் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளன. இது நிறுத்தப்பட வேண்டும். அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் தூய்மை ஸ்ரீலங்கா திட்டம் வெற்றியளிக்கும்.

தொல்லியல் திணைக்களம், வன இலாகா என்பன தனியான அரசுகள்போல்தான் செயற்படுகின்றன. மக்களின் காணிகளை திட்டமிட்ட அடிப்படையில் அபகரிக்கின்றன. மேற்படி திணைக்களத்தால் பிடிக்கப்பட்ட காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )