தென்னை மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்
தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”2023 மரம் தறித்தல் சட்டத்திற்கமைய தென்னை மரம் தறித்தலின் போது அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும்.
அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் தறித்தலில் ஈடுபடுகின்றனர். உரிய அனுமதியின்றி தென்னை மரம் தறிப்பவர்களுக்கு 6 மாதம் சிறைச் செல்ல நேரிடும். அத்துடன் மரம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்த நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.