கசிப்பு தயாரித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வீட்டில் கசிப்பு தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்று (23) மாலை கைது செய்ததாக ஒகவெல பொலிஸ் தெரிவித்துள்ளது.
மதத்தேனகம, விதாரந்தேனிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
54 வயதான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான சந்தேக நபர், 1988 ஆம் ஆண்டு கதுருவெல பொலிஸில் பணியாற்றியபோது நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka