தோல்விக்கு இதுவே காரணம்

தோல்விக்கு இதுவே காரணம்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில், இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியடைந்தமை தொடர்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க மனம் திறந்துள்ளார். 

அதிகமான ஓட்டங்களை வெற்றியிலக்காக எதிரணிக்கு நிர்ணயிக்கும் நோக்கில் துடுப்பெடுத்தாடியமையே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “ 160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கிச் சென்றமையே தமது அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். 

எமது அணியின் பலம் பந்து வீச்சு. கடந்த போட்டிகளில் 2ஆவதாக பந்து வீசி பல போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளோம். அதனால் தான் நாம் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தோம்.  பந்து வீச்சில் எதிர் அணியை வீழ்த்தத் திட்டமிட்டோம்.  எமது இலக்கு 160ற்கும் அதிக ஓட்டங்களாக இருந்தது. 

எனினும் அந்த மைதானத்தைப் பொருத்த வரையில் எமது ஓட்ட இலக்கு 130ஆக இருந்திருக்க வேண்டும். 130 என்பது 180ற்கும் அதிகமான ஓட்டங்களுக்கு சமமாகும்.  எவ்வாறாயினும், 2ஆவதாக பந்து வீசி நாம் பாரிய அழுத்தத்தை எதிரணிக்கு கொடுத்திருந்தோம்.  எடுத்த தீர்மானத்தில் உள்ள தவறை விட, எமது ஓட்ட இலக்கில்தான் தவறு உள்ளது என நான் நினைக்கிறேன்” என வனிந்து ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )