
NEEK பட டிரெய்லர் வெளியீடு
திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ்.
இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் இம்மாதம் 21-ம் திகதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலக்ஷமி கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை லியோன் பிரிட்டோ மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார்.