கடந்த ஆட்சியின் பல திட்டங்கள் இரத்து
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.