
குருநாகல் – தோராய பஸ் விபத்து ; சாரதி கைது
குருநாகல் – தோராய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுருஓயாவிலிருந்து கொழும்புக்கும், கதுருவெலவிலிருந்து குருநாகலுக்கும் பயணித்த இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கதுருவெலவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் , தோரயாவில் நிறுத்தப்பட்டிருந்தபோது, மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka